நிர்வாண தண்டனையை எதிர்த்து வென்ற பாகிஸ்தான் பெண்!

நிர்வாண தண்டனையை எதிர்த்து வென்ற பாகிஸ்தான் பெண்!

Pakistan's gang rape victim Mukhtar Mai, centre, walks with models during a fashion show in Karachi, Pakistan, Tuesday, Nov. 1, 2016. Gang-raped and paraded naked 14 years ago, Mukhtar Mai walked on a ramp in Pakistan fashion week on Tuesday. A red-carpet reception accorded in Pakistani southern city of Karachi by country's elite fashionista is her debut appearance, which she says she's doing as a symbol of courage for womenfolk. (AP Photo/Shakil Adil)

இவருக்கு நேர்ந்த கொடுமை மற்ற பெண்களுக்கு நேர்ந்திருந்தால் அந்த நொடியிலேயே தன்னை மாய்த்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் இந்தப் பெண், தனக்கு நேர்ந்த அவமானத்தைத் தாங்கிக்கொண்டு, சட்டப்போராட்டம் மேற்கொண்டு, மற்ற பெண்களுக்கு ரோல் மாடலாக இருந்து வருகிறார். அவர்… பாகிஸ்தானைச் சேர்ந்த முக்தர் மாய்.

14 வருடங்களுக்கு முன்பு சில நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டவர் முக்தர் மாய். மற்ற பெண்களைப்போல கூனிக்குறுகி வீட்டில் முடங்காமல், தனக்கு அநீதி இழைத்தவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்ற உறுதியுடன், துணிச்சலாக சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தார். அதுமட்டுமின்றி, தன்னைப்போல பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, தன்னுடைய முயற்சி முன்உதாரணமாக இருக்கவேண்டும் என்பதற்காக, நவம்பர் 2-ம் தேதி கராச்சியில் நடந்த ஒரு ஃபேஷன் ஷோவில் கலந்துகொண்டு, மேடையில் கம்பீரமாக முக்தர் மாய் நடந்துவந்தபோது, அவரின் தாய்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுக்க உள்ள பாதிக்கப்பட்ட பெண்களின் மனதில் நம்பிக்கை விதைத்தார்.

loading...

அ ந் நியன் செய்திக்காக-இரா.இ

loading...

LEAVE A REPLY