நட்சத்திரங்களை உருவாக்கிய விஜய் டிவி யை புறக்கணிக்கும் நட்சத்திரங்கள் – நடந்தது என்ன ??? குற்றமும்...

நட்சத்திரங்களை உருவாக்கிய விஜய் டிவி யை புறக்கணிக்கும் நட்சத்திரங்கள் – நடந்தது என்ன ??? குற்றமும் பின்னணியும் …

நட்சத்திரங்களை உருவாக்கிய விஜய் டிவி யை புறக்கணிக்கும் நட்சத்திரங்கள் – நடந்தது என்ன ??? குற்றமும் பின்னணியும் …
நட்சத்திரங்களை உருவாக்கிய விஜய் டிவி யை புறக்கணிக்கும் நட்சத்திரங்கள் – நடந்தது என்ன ??? குற்றமும் பின்னணியும் …

இன்று தமிழ்நாட்டில் மிக அதிகமாக அனைவராலும் விரும்பப் படும் தொலைக்காட்சியாக விஜய் டிவி மாறி வருவது அனைவரும் அறிந்ததே …

விஜய் டிவி இன் பல நிகழ்ச்சிகள் மிக பிரபலம் … குறிப்பாக சூப்பர் சிங்கர் , ஜோடி நம்பர் ஒன் , கலக்க போவது யாரு போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலம் … இதில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் பலர் இன்று சினிமா துறையிலும் மற்ற தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் கலக்கி வருகின்றனர் …

loading...

சந்தானத்தில் தொடங்கி சிவகார்த்திகேயன் , மா.க.ப ஆனந்த் , ப்ரேமம் பட நாயகி என பல நட்சத்திரங்கள் இந்த நிகழ்சிகளில் இருந்து தோன்றியவர்கள் தான் …

இதனால் விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைவராலும் விரும்பி பார்க்கப்படுவதோடு , அதில் பங்கேற்க வரும் நட்சத்திரங்களுக்காகவே இந்நிகழ்சிகளுக்கு வரவேற்பு அதிகம் …

ஒவ்வொரு துறையிலும் சிறந்த , பிரபலமான நபர்களே நடுவர்களாக இருப்பது தான் இந்த வகை நிகழ்ச்சிகளுக்கு மிக பெரிய பலம் .,

குறிப்பாக நடன இயக்குனர்கள் , மிக பெரிய நடன பயிற்றுனர்கள் , பாடகர்கள் , சங்கீத வித்துவான்கள் என இதில் நடுவர்களாக இருப்பார்கள் .,

இவ்வாறு ஏறுமுகத்திலேயே சென்று கொண்டிருந்த விஜய் டிவி கு என்னாச்சு ???

ஆம் ., சமீபமாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சிகளில் நடுவர்களாக சம்மந்தமே இல்லாத ஆட்கள் வருவதும் , பகேற்றவர்களே திரும்ப திரும்ப பங்கேற்பதும் , ஒருவரே பல நிகழ்ச்சிகளில் வருவதும் அதிகரித்து வருகிறது …

குறிப்பாக மிக பிரபலமான ஜோடி நிகழ்ச்சிக்கு தற்போது டி.ஆர். மற்றும் சதா இருவரும் நடுவராக பங்கேற்க வந்திருப்பது அனைவருக்கும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது , சதா என்ற ஒரு நடிகை இருப்பதே இவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததுக்கு பின் தான் நினைவுக்கு வந்திருக்கும் , அது மட்டும் இல்லாமல் நடனத்திற்கும் அவருக்கும் என்ன தொடர்பு னும் இது வரைக்கும் யாருக்கும் தெரியவில்லை ..,

டி.ஆர் அவர்கள் திறமை வாய்ந்தவர் தான் என்றாலும் இப்போது பல நிகழ்ச்சிகளில் இப்போது கழட்டி விட பட்டவர் .,

இது மட்டுமின்றி கலக்க போவது யாரில் வரும் நபர்களே திரும்ப திரும்ப பல நிகழ்ச்சிகளில் வருவதும் ஒரு வித சலிப்பை உண்டாக்குகின்றது .,

திடீரென்று சூப்பர் சிங்கர் நடுவராக சமையல் வெங்கட் வருவதும் இடத்தை நிரப்ப ஆள் இன்றி வர வைத்திருப்பது நன்றாக தெரிகிறது .,

இதற்கெல்லாம் காரணம் என்ன ??? நல்லா இருந்த விஜய் டிவி கு என்ன ஆச்சு ???

vij
இதை பற்றி பலரை கேட்டதில் கிடைத்த விஷயம் என்னவென்றால் இதற்கெல்லாம் காரணம் விஜய் அவார்ட்ஸ் தான் என ஒரு கூட்டம் சொல்கிறது .,

அதில் என்ன பிரச்சனை என்றால் , விஜய் அவார்ட்ஸ் என்ற பெயரில் தனக்கு பிடித்தவர்களுக்கே அவார்ட் கொடுப்பது பல நட்சத்திரங்களுக்கு அதிருப்தி அளித்ததால் , விஜய் டிவி யை அனைவரும் புறக்கணிப்பதாக பேச்சு அடிபடுகிறது .,

மேலும் டி.ஆர்.பி க்காக நீயா நானா மற்றும் பல நிகழ்ச்சிகளில் பல உண்மைகள் மறைக்கப்பட்டு , வெட்டி திருத்தம் செய்து ஒளிபரப்புவது போன்ற பிரச்சனைகள் தான் இவற்றிற்கு காரணம் என்றும் சொல்கிறார்கள் .,

எது எப்படியோ , இந்த ரியாலிட்டி ஷோ மோகத்திலிருந்து நம்ம மக்கள் வெளி வந்தால் சரி ..,

loading...

LEAVE A REPLY