அரசியல் மோதல் எதிரொலி: 10 மாத குழந்தையை தூக்கி எறிந்த கட்சியினர்

அரசியல் மோதல் எதிரொலி: 10 மாத குழந்தையை தூக்கி எறிந்த கட்சியினர்

மலப்புரம்: அரசியல் மோதல் காரணமாக, 10 மாத குழந்தையை காரில் இருந்து ஒரு கட்சியினர் தூக்கி எறிந்துள்ளனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் சுரேஷ். அவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி அன்று, தன்னுடைய 10 மாத குழந்தையுடன் காரில் அமர்ந்துள்ளார். தன்னுடைய நண்பர் வருகைக்காக காத்திருந்துள்ளார். அப்போது அங்கு சிலர் சுரேஷை காரில் இருந்து வெளியேறுமாறு கூறியுள்ளனர். இதற்கிடையில் அவர்கள் காரில் இருந்து குழந்தையை தூக்கி வீசியுள்ளனர்.

loading...

மேலும் சுரேசை தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து, சுரேஷ் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். தாக்கியவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளார். அப்பகுதியில் பாஜகவினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பாஜகவைச் சேர்ந்த சுரேஷ், இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் நல ஆணையத்தில் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

loading...

LEAVE A REPLY