ஜல்லிக்கட்டு வழக்கில் ஓரிரு நாளில் தீர்ப்பு

    புதுடில்லி : தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் வலுத்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பை வெளியிட சுப்ரீம் கோர்ட் முடிவு செய்துள்ளது.
    சுப்ரீம் கோர்ட்டில் உள்ள தடை நீடிப்பதால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய-மாநில அரசுகள் அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதிமுக எம்.பி.,க்களும் இன்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவேவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். தொடர்ந்து பிரதமர் அலுவலகத்திற்கும் சென்று முதன்மை செயலர் மிஸ்ராவிடம் மனு அளித்தனர். இதற்கிடையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
    வழக்கு நிலுவையில் உள்ளதால் சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்காக காத்திருப்பதாகவும், உத்தரவு வந்த பிறகு ஜல்லிக்கட்டு குறித்து முடிவு செய்யப்படும் என மத்திய அமைச்சர் அனில் மாதவ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் வலுத்துள்ளதால் சுப்ரீம் கோர்ட் இன்னும் ஓரிரு நாட்களில் தீர்ப்பை வெளியிட முடிவு செய்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த சுப்ரீம்கோர்ட் அனுமதி வழங்குமா? என்பதில் தொடர்ந்து கேள்விக்குறி எழுந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

    loading...

    LEAVE A REPLY