ரோட்டில் கூடி கலைந்த தீபா ஆதரவாளர்கள்

ரோட்டில் கூடி கலைந்த தீபா ஆதரவாளர்கள்

சென்னை: சென்னை, நங்கநல்லூரில் தீபா ஆதரவாளர்கள் கூட்டம், கல்யாண மண்டபத்தில் நடக்காமல் நடு ரோட்டில் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


loading...

ரோட்டில் கூட்டம்:

அ.தி.மு.க.,வில் சசிகலாவுக்கு எதிர்ப்பு வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு மக்கள் ஆதரவு திரும்பி வருகிறது. தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் என்பவர், சென்னை, நங்கநல்லூரில் உள்ள கே.சி.பி. மகால் என்ற கல்யாண மண்டபத்தில் இன்று மதியம் ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்து இருந்தார்.

இதற்காக முன்பணத்தையும் கல்யாண மண்டபத்தில் செலுத்தி இருந்தார். ஆனால், உள்ளூரை சேர்ந்த அ.தி.மு.க.,வின் முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் கட்சி நிர்வாகிகள் கொடுத்த நெருக்கடி காரணமாக இன்று திருமண மண்டபத்திற்குள் தீபா ஆதரவாளர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, 200க்கும் மேற்பட்ட தீபா ஆதரவாளர்கள் ரோட்டில் ஒன்று கூடி பேசினர். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக விவாதித்தனர். முடிவுகள் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

loading...

LEAVE A REPLY