அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு தொடரும் போராட்டம்

அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு தொடரும் போராட்டம்

அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு தொடரும் போராட்டம்
அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு தொடரும் போராட்டம்

கும்பகோணம்: அரியலூரை சேர்ந்த மாணவி அனிதாவுக்கு நீதி கேட்டு கும்பகோணம் மற்றும் நாகர்கோவில் ஆகிய கல்லூரிகளில் மாணவர்கள் தங்கள் போராட்டங்களை 6-ஆவது நாளாக தொடர்ந்து வருகின்றனர். நீட் தேர்வால் மருத்துவ கனவு தகர்ந்த நிலையில் மனம் உடைந்த அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனால் கடந்த 10 நாள்களுக்கு மேல் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர்.

Justice for Anitha: students continues their protest கல்லூரி மாணவர்கள் தங்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள பயோனியர் குமாரசுவாமி கல்லூரி மாணவர்களும், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் 6-ஆவது தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரியும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரியும் கோஷமிட்டு வருகின்றனர். இதனால் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே நாமக்கல் ராசிபுரத்தில் அண்டகளூர்கேட்டில் உள்ள திருவள்ளூர் கலைக் கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

loading...

LEAVE A REPLY