சசிகலாவிடம் நலம் விசாரித்த கர்நாடக அமைச்சர்

சசிகலாவிடம் நலம் விசாரித்த கர்நாடக அமைச்சர்

சசிகலாவிடம் நலம் விசாரித்த கர்நாடக அமைச்சர்
சசிகலாவிடம் நலம் விசாரித்த கர்நாடக அமைச்சர்
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, தன் ஆய்வின் போது, நேற்று சந்தித்து பேசினார்.

சிறையில் ஆய்வு:

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தின் புதிய உள்துறை அமைச்சராக, ராமலிங்க ரெட்டி, சமீபத்தில் பொறுப்பேற்றார். முதன் முறையாக, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், நேற்று அவர் ஆய்வு செய்தார். அப்போது, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா அடைக்கப்பட்டுள்ள அறைக்கு சென்றார்.

loading...

நலம் விசாரிப்பு:

அமைச்சரை பார்த்ததும், எழுந்து வந்த சசிகலா, ”வணக்கம்,” என கூற, பதிலுக்கு அமைச்சரும் வணக்கம் தெரிவித்துள்ளார். ”நலமாக இருக்கிறீர்களா; சாப்பிட்டீர்களா,” என, சில கேள்விகளை, தமிழிலேயே அவர் கேட்க, சசிகலாவும் பதில் கூறி, சிரித்துள்ளார்; அப்போது இளவரசியும் உடனிருந்ததாக, ராமலிங்க ரெட்டி, தன் பேட்டியில் கூறியுள்ளார்.

சசிகலா,நலம்,விசாரித்த,கர்நாடகா,அமைச்சர்

loading...

LEAVE A REPLY