சமூக வலைதளத்தில் வறுபடும் தமிழக பா.ஜ., தலைவர்கள்

0
196
சமூக வலைதளத்தில் வறுபடும் தமிழக பா.ஜ., தலைவர்கள்
சமூக வலைதளத்தில் வறுபடும் தமிழக பா.ஜ., தலைவர்கள்

சமூக வலைதளங்களில், தமிழக பா.ஜ., தலைவர்களை வறுத்தெடுப்பதால், பதிலடி கொடுக்க முடியாமல், அக்கட்சியினர் புலம்புகின்றனர்.

 

‘மீம்ஸ்’

 

லோக்சபா தேர்தலில், பா.ஜ., வென்ற பின், சமூக வலைதளங்களில், அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர், பா.ஜ.,வை விமர்சிப்பதை முழுநேர தொழிலாக செய்து வருகின்றனர். அவர்களுடன் மாநில கட்சியினரும், காங்கிரசாரும் சேர்ந்து, பா.ஜ.,வுக்கு எதிராக, பலமுனை தாக்குல் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில், எச்.ராஜா, தமிழிசை, வானதி மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர், அதிக அளவில் விமர்சிக்கப்படுபவர்களாக உள்ளனர். அதிலும், தமிழிசை குறித்து, ‘மீம்ஸ்’கள் அடிக்கடி வெளியாகின்றன.

‘நீட்’ நுழைவுத்தேர்வு விவகாரத்தில், இது பெரிதும் அதிகரித்தது. நீட் தொடர்பாக, திருச்சியில், பா.ஜ., நடத்திய பொதுக்கூட்டம், வலைதளத்தில் பலத்த கிண்டலுக்கு காரணமானது.

தமிழிசை மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசும்போது, பொதுக்கூட்டத் திடலில், நாற்காலி கள் காலியாக இருந்த புகைப்படத்தை, ‘பேஸ்புக், டுவிட்டர்’ போன்ற, சமூக வலைதளங்களில் எதிர்ப்பாளர்கள் பதிவிட்டு, பரவலாக கடுப்பேற்றினர்.

 

கேலி கிண்டல்

 

அதற்கு பதிலடியாக,எச்.ராஜா போன்றோர், திடல் நிறைந்திருப்பதைப் போன்ற புகைப்படத்தை வெளியிட்டுஉள்ளனர். ஆனால், எதிர் தரப்பின் கிண்டல்களுக்கு, இது கடலில் கரைத்த பெருங்காயம் போல் ஆகிவிட்டது.

‘நீட்’ எதிர்ப்புக்கு பதில் அளிக்கும் பா.ஜ.,வால், ‘மீம்ஸ்’களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.சமூக வலைதளங்களில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, மத்தியில் ஆட்சியை பிடித்த கட்சிக்கா இந்த நிலை என, தமிழக பா.ஜ.,வினர் புலம்பி வருகின்றனர். விமர்சனங்களுக்கும், கேலி கிண்டல்களுக்கும், சமூக வலைதளத்தில் கடுமையாக பதிலடி தர வேண்டும் என, விரும்புகின்றனர்.

 

முகநுால்

இது குறித்து, பா.ஜ., தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர், திலீப்குமார் கூறுகையில், ”திருச்சியில் நிறைந்திருந்த கூட்டம், நேரில் பார்த்தவர்களுக்கு புரிந்திருக்கும். அதை, பா.ஜ., முகநுால் பக்கத்தில், நேரலையாக ஒளிபரப்பு செய்தோம்,” என்றார்.

B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here