சவுதி அரேபியாவில் புரட்சியை முன்னெடுத்த தனி ஒருத்தி!

  0
  70
  சவுதி அரேபியாவில் புரட்சியை முன்னெடுத்த தனி ஒருத்தி!
  சவுதி அரேபியாவில் புரட்சியை முன்னெடுத்த தனி ஒருத்தி!

  பெண்களுக்கான சுதந்திரம் என்பது, சவுதி அரேபியாவில் இன்னமும் நடக்காத ஒரு விஷயமாகவே இருந்துவருகிறது. அந்த நிலையை மாற்றும் முயற்சியில் முதல் அடியை தனி ஒருத்தியாக எடுத்துவைத்திருக்கிறார், மனால் அல் ஷரிஃப்.

  சவுதி

  மிகப்பெரிய எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரியும் மனால், சமீபத்தில் அமெரிக்காவுக்கு மாறுதல் செய்யப்பட்டார். சவுதி அரேபியாவில், பெண்கள் அனைவரும் ஆண்களில் நிழலில்தான் வாழ வேண்டும் என்ற நிலை இன்னமும் நீடித்துவருகிறது. அங்கே, பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி இல்லை. அப்படி மீறி ஓட்டினால் சிறைத்தண்டனை விதிக்கப்படும். அப்படிப்பட்ட நிலையிலிருந்து அமெரிக்காவின் வாழ்க்கை முறைக்கு மாறிய மனால், தானாக வாகனத்தை ஓட்டும்போது சுதந்திர உணர்வை அனுபவத்திருக்கிறார். அது அவருக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஆனந்தத்தையும் தந்திருக்கிறது.

  மீண்டும் அவர் சவுதி அரேபியாவுக்கு வந்தபோதுஇந்த மாற்றத்தைத் தனது நாட்டில் ஏற்படுத்தத் திட்டமிட்டுத் துணிந்து இறங்கியுள்ளார். ஏற்கெனவே, சவுதி அரேபிய இளைஞர்கள் சமூக வலைதளங்களில் மாற்றம் வேண்டி பிரசாரம் செய்துவரும் நிலையில், மனால் அல் ஷரிஃபின் கார் ஓட்டும் புரட்சி தொடங்கியிருக்கிறது. அதற்காக அவர், ஒன்பது நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here