சைக்கிள்களுடன் பாலாற்று வெள்ளத்தில் இறங்கி பள்ளி செல்லும் மாணவிகள் : பாலம் அமைக்க கோரிக்கை

வாணியம்பாடி:  ஆவாராங்குப்பம் திம்மாம்பேட்டை இடையே பாலம் இல்லாததால் மாணவிகள் இடுப்பளவு வெள்ளத்தில் சைக்கிள்களுடன் இறங்கி ஆபத்தான நிலையில் பள்ளிக்கு செல்கின்றனர். வாணியம்பாடி அடுத்த  ஆவாரங்குப்பம் திம்மாம்பேட்டை இடையே  பாலாறு உள்ளது. இந்த பாலாறு சுமார் அரை கிலோமீட்டர் அகலமுடையது. இந்தப்பகுதி கடந்த பல ஆண்டுகளாக மழையின்றி, ஆற்றில் தண்ணீர் வரத்தின்றி இருந்தது. இதில் பொதுமக்கள், மாணவர்கள் தினந்தோறும் ஆற்று மணலில் நடந்தே சென்று அவதிபட்டு வந்தனர்.இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு, பாலாற்று படுகையில் தொடர்ச்சியாக பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இத்தனை நாட்களாக ஆற்றில் நீர் வராததால் ஆங்காங்கே மணல் திருடப்பட்டு, உயிருக்கு உலை வைக்கும் ஆபத்தான குழிகள் உள்ளன.

loading...

இந்த நிலையிலும் மாணவ, மாணவிகள் சைக்கிள்களுடன் இடுப்பளவு வெள்ளத்தில் இறங்கி பாலாற்றை கடந்து பள்ளிக்கு செல்கின்றனர். அதேபோல் இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்களும் பல்வேறு இடங்களுக்கு இந்த ஆற்றைக் கடந்துதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. வெளியூர்களிலிருந்து, கனகநாச்சியம்மன் கோவிலுக்கும் இவ்வழியாகத்தான் சென்று வருகின்றனர். வெள்ளகாலங்களில் இதுபோன்ற உயிருக்கு ஆபத்தான  பாலாற்றுப்  பயணத்தை பள்ளி மாணவர்கள் தவிர்க்கவும், திடீர் என ஏற்படும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், இப்பகுதியில் பாலாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்பதே, இச்சுற்றுப்புற பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

loading...

LEAVE A REPLY