திருச்சியில் மாபெரும் நாணயக் கண்காட்சி…!

0
13
திருச்சியில் மாபெரும் நாணயக் கண்காட்சி…!
திருச்சியில் மாபெரும் நாணயக் கண்காட்சி…!

ஸ்ரீ சிவானந்த பாலாலயா பள்ளி சார்பில் மாபெரும் நாணயக் கண்காட்சியினை செப்டம்பர் 16 மற்றும் 17 ஆம் தேதி திருச்சி ஸ்ரீ சிவானந்த பாலாலயா பள்ளி வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றுவருகிறது. பண்டைய காலத்தில் பண்டமாற்று முறையிலேயே மக்கள் பொருள்களை பரிமாறிக் கொண்டனர். வணிக வளர்ச்சி, நாகரிக வளர்ச்சி காரணமாக நாணயங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி காலத்திற்கேற்றாற் போல மாற தொடங்கியது.

நாணயக் கண்காட்சி

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நாணயங்கள், தோற்றம் வளர்ச்சியை அறிந்து கொள்ளும் விதமாக கல்வி கண்காட்சியாக சேரர், சங்க காலச் சோழர், சங்ககால பாண்டியர், முத்திரை நாணயங்கள் தோற்றமும், வளர்ச்சியும், மெளரியர், குஷானர், சாதவாகனர், உருத்ரசேனர், குப்தர், ஹர்ஷவர்த்தனர், சாளுக்கியர், பல்லவர், ஜகதேகமல்லர், பிற்கால சோழர் நாணயங்கள், கொங்கு சோழர், பாண்டியர், டெல்லி சுல்தான், முகலாயர், வாணாதிராயர், விஜயநகரம், நாயக்கர் கால நாணயங்கள், மைசூர் சுல்தான் நாணயங்கள், மைசூர் உடையார், ஆங்கிலக் கிழக்கிந்திய நாணயங்கள், மராட்டியர் கால காசுகள், திருவிதாங்கூர், சாதவாகனர், போர்ச்சுகீசியர், டேனிஷ் இந்திய நாணயங்கள், இந்தோ டேனிஷ் நாணயங்கள், டச்சு இந்திய நாணயங்கள், சுதந்திர இந்திய நாணயங்கள் மற்றும் உலகத்திலுள்ள 200 நாடுகளின் நாணயங்களும் இ்ங்கு காட்சி படுத்தப்பட்டுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here