நெடுவாசல் அருகே நல்லாண்டார்கொல்லையில் தீப்பிடித்து எரிந்த ஓஎன்ஜிசி எண்ணெய் தொட்டி மூடப்பட்டது

0
30
நெடுவாசல் அருகே நல்லாண்டார்கொல்லையில் தீப்பிடித்து எரிந்த ஓஎன்ஜிசி எண்ணெய் தொட்டி மூடப்பட்டது
நெடுவாசல் அருகே நல்லாண்டார்கொல்லையில் தீப்பிடித்து எரிந்த ஓஎன்ஜிசி எண்ணெய் தொட்டி மூடப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே நல்லாண்டார்கொல்லையில் 2009-ல் ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து எரிபொருள் சோதனை மேற்கொண்டது.

அப்போது, சுமார் 40 அடி சுற்றளவில் எண்ணெய்க் கழிவுகளை சேகரித்து வைப்பதற்காக 2 தொட்டிகள் கட்டப்பட்டன. அதில், ஒரு தொட்டியில் சுமார் 5 அடி ஆழத்துக்கு எண்ணெய்க் கழிவு இருந்தது. இந்த தொட்டி நேற்று முன்தினம் மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது.

அங்கு ஆய்வுக்கு வந்த கறம்பக்குடி வட்டாட்சியர் எஸ்.சக்திவேல் உள்ளிட்டோரை கிராம மக்கள் சிறைபிடித்து, ஆட்சியர் சு.கணேஷ் அளித்த உத்தரவாதத்தின்படி தொட்டிகளை மூடாததைக் கண்டித்து முழக்கமிட்டனர். தொட்டிகள் உடனடியாக மூடப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, நேற்று எண்ணெய்க் கழிவுத் தொட்டி இடிக்கப்பட்டு, மண் கொட்டி மூடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here