மதுபோதையில் கார் ஓட்டிய இளைஞர்கள்: கட்டுப்பாட்டை இழந்து மெரினாவில் விபத்து!

மெரினாவில், மதுபோதையில் வேகமாக வந்த கார், சிக்னல் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

மெரினா கார் விபத்து
ஈ.சி.ஆரிலிருந்து நள்ளிரவு நான்கு இளைஞர்கள் வோக்ஸ்வேகன் போலோ காரில் மெரினாவுக்கு வலம் வந்துள்ளனர். நான்கு பேரும் மதுபோதையில் இருந்துள்ளனர். இதையடுத்து, கண்ணகி சிலை – அண்ணா சதுக்கம் பீச் சாலையில்அவர்கள் அதிவேகமாக வந்துள்ளனர்.  உழைப்பாளர் சிலை அருகே வரும்போது, திடீரென்று சேப்பாக்கம் செல்லும் சாலையில் காரை விட்டுள்ளனர். ஆனால், போதையில் அதிவேகத்தில் வந்ததால், கார் கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த சிக்னல் கம்பத்தின் மீது மோதியது.

loading...

சி.சி.டி.வி கேமரா, சிக்னல் போன்றவற்றை உள்ளிடக்கிய அந்தக் கம்பம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதேபோல, காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது. குறிப்பாக, காரில் இருந்த ஆயில், சாலையில் சிந்தியது. இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த திருவல்லிக்கேணி போலீஸார், இளைஞர்களை அழைத்துச்சென்று விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், விபத்துக்குள்ளான காரையும் அவர்கள் பறிமுதல்செய்தனர். காரில் வந்த நான்கு இளைஞர்களும் கல்லூரி மாணவர்கள் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தால், மெரினாவில் பரபரப்பு ஏற்பட்டது.

loading...

LEAVE A REPLY