தீவிரவாதத்தை ஒழிக்காத பாகிஸ்தான் மீது அதிருப்தி: ரூ.1,650 கோடி நிதி உதவியை நிறுத்தி வைக்க அமெரிக்கா...

தீவிரவாதத்தை ஒழிக்காத பாகிஸ்தான் மீது அதிருப்தி: ரூ.1,650 கோடி நிதி உதவியை நிறுத்தி வைக்க அமெரிக்கா முடிவு

தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தானுக்கு ரூ.1,650 கோடி நிதியை நிறுத்தி வைப்பது குறித்து அமெரிக்கா பரிசீலனை செய்து வருகிறது.

கடந்த 2002-ம் ஆண்டு முதல் தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆண்டுதோறும் அமெரிக்கா நிதியுதவி வழங்கி வருகிறது. இதுவரை ரூ.2.14 லட்சம் கோடி வழங்கி உள்ளது. ஆனால் தீவிரவாத அமைப்புகளை ஒழிப்பதில் பாகிஸ்தான் தீவிரமாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

loading...

குறிப்பாக, கனடா-அமெரிக்க தம்பதி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கனில் கடத்தப்பட்டனர். இவர்களை பாகிஸ்தானின் ஹக்கானி தீவிரவாத அமைப்பினர் கடத்தியதாக தகவல் வெளியானது. ஆனால் அவர்களைப் பற்றிய விவரத்தை தர பாகிஸ்தான் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, அமெரிக்கா கொடுத்த தகவலின் அடிப்படையில் சமீபத்தில் அவர்கள் மீட்கப்பட்டனர். இதனால் பாகிஸ்தான் அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் முன்னணி நாளிதழில், “தீவிரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் ரூ.1,650 கோடி நிதியுதவியை நிறுத்தி வைப்பது குறித்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அரசு ஆலோசித்து வருகிறது” என செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் கூறும்போது, “தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தவறானது. மற்ற நாடுகள் சொல்லி நாங்கள் செயல்பட அவசியமில்லை. எங்கள் நாட்டு நலன் கருதி தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.– பிடிஐ

loading...

LEAVE A REPLY