அதிமுகவின் குழப்பத்தைப் பயன்படுத்தி கட்சி தொடங்க ரஜினி முயல்கிறார்: நாராயணசாமி

அதிமுகவின் குழப்பத்தைப் பயன்படுத்தி கட்சி தொடங்க ரஜினி முயல்கிறார்: நாராயணசாமி

அரசியலுக்கும் ஆன்மிகத்துக்கும் தொடர்பு இல்லை. எந்த மதமும் அரசியலுக்கு தேவைப்படாத ஒன்று. அதிமுகவில் உள்ள குழப்பத்தைப் பயன்படுத்தி அரசியல் கட்சியை ரஜினி தொடங்க முயல்வதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:

loading...

புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாநில நிர்வாகியான ஆளுநர் கிரண்பேடி எங்களுடன் இணைந்து பணிபுரிந்தார். அரசு மீது அவர் மாற்றுக் கருத்து வைத்திருந்தாலும், அவர் பணி செய்வதைப் பாராட்டுவது கடமையாகும்.

கடந்த 31-ம் தேதி அரசியல் கட்சி ஆரம்பிக்கத் தயாராக இருப்பதாக ரஜினி கூறியுள்ளார். ஜனநாயக இந்தியாவில் அனைவருக்கும் கட்சி ஆரம்பிக்கும் உரிமை உள்ளது. ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிப்பது வரவேற்கதக்கது.

தமிழகம் பறந்து, விரிந்த மாநிலம். சினிமா நட்சத்திரங்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து சிலர் வெற்றி பெற்றுள்ளனர். பலர் தோல்வி அடைந்துள்ளனர். ரஜினி எடுக்கும் நடவடிக்கையைப் பொறுத்துதான் அவர் நிலைத்து நிற்பாரா? இல்லையா? என்பதைக் கூற முடியும்.

அதிமுகவில் உள்ள குழப்பத்தைப் பயன்படுத்தி அரசியல் கட்சி தொடங்க முயல்வதாக கருதலாம். திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மதச் சார்பற்றவையாக பலமான அணியாக உள்ளது. தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் வேரூன்றி உள்ளன.  ரஜினி ஆன்மிக அரசியல் செய்யப்போவதாகக் கூறியுள்ளார். அரசியலுக்கும், ஆன்மிகத்துக்கும் தொடர்பு இல்லை. எந்த மதமும் அரசியலுக்கு தேவைப்படாத ஒன்று.

ரஜினியின் பேட்டி தெளிவு இல்லாததைப்போல் உள்ளது. எனவே காலம்தான் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பதில் கூறும்” என்று நாராயணசாமி தெரிவித்தார்.

loading...

LEAVE A REPLY