கமல்ஹாசனை திடீரென சந்தித்த அன்புமணி மனைவி? காரணம் என்ன?

0
80

கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரஜினி பாணியில் ரசிகர்களை கடந்த இரண்டு நாட்களாக கமல் சந்தித்து வருகிறார். இதனால் ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று கமல்ஹாசனை சந்திக்க பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியின் மனைவி சவும்யா அவரது அலுவலகத்திற்கு வருகை தந்தார். கமல், ரஜினி உள்பட நடிகர்களின் அரசியலை பாமக எதிர்த்து வரும் நிலையில் அன்புமணியின் மனைவி கமல்ஹாசனை சந்திக்க வந்தது அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தது

இந்த நிலையில் அன்புமணி வீட்டில் நடைபெறவிருக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கவே அவருடைய மனைவி கமல்ஹாசனை சந்தித்ததாகவும், சவும்யாவிடம் இருந்து அழைப்பிதழை பெற்றுக்கொண்ட கமல், நிச்சயம் விழாவுக்கு வருகை தருவதாக தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கருணாநிதியிடம் பத்திரிகை கொடுக்க சென்று தேர்தல் உடன்பாட்டை செய்தவர் தான் ராமதாஸ் என்ற நிலையில் கமலிடம் என்ன கணக்கை பாமகவினர் துவங்கவிருக்கின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here