கருணாநிதியைப் போல் ஸ்டாலின் அரசியல் செய்யவில்லை: டிடிவி தினகரன் விமர்சனம்

கருணாநிதியைப் போல் ஸ்டாலின் அரசியல் செய்யவில்லை: டிடிவி தினகரன் விமர்சனம்

 மு.க.ஸ்டாலின் ஆர்.கே.நகரை கோட்டை விட்டுவிட்டார். அவர் தந்தை கருணாநிதியைப் போல் அரசியல் செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரனிடம் அனுபவம் உள்ள மு.க.ஸ்டாலின் தோல்வி மற்றும் திமுகவுடன் கூட்டு வைத்துள்ளதாக கூறும் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

loading...

அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:

”நாற்பது ஆண்டு கால அனுபவம் உள்ள மு.க ஸ்டாலின் ஆர்.கே நகரை எப்படித் தவற விட்டார் என்றே எனக்கு தெரியவில்லை, அவரது தந்தை இருந்திருந்தால் வேறு யுத்திகளை கையாண்டு இருப்பார். மு.க.ஸ்டாலின் திமுகவுக்கு உள்ள வாக்கு வங்கி அரித்மெடிக் அரசியலை வைத்து அரசியல் செய்தார்.

அதனால் தோல்வி கிடைத்தது. ஆனால் அவரது அப்பா கருணாநிதி அப்படிச் செய்ய மாட்டார் அவர் ஒவ்வொரு தேர்தலையும் புதியதாகத்தான் பார்ப்பார். அவர் அதை ஆசிட் டெஸ்ட்டாகத்தான் அணுகுவார். மு.க.ஸ்டாலின் அவரைப் போல் இயங்க வேண்டும்.

நான் வெற்றி பெற்றதால் பொறுத்துக்கொள்ள முடியாமல் வேண்டும் என்றே விமர்சனம் வைக்கிறார்கள். திமுகவுடன் கூட்டு வைத்து செயல்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் போன்றவர்கள் கூறினார்கள். திமுக ஆர்.கே.நகரில் டெபாசிட் கூட பெற முடியவில்லை. இதிலிருந்தே திமுகவுடன் நாங்கள் கூட்டு வைக்கவில்லை என்பது விளங்கி இருக்கும்.”

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.

loading...

LEAVE A REPLY