கருணாஸ் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்கள் முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பு

கருணாஸ் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்கள் முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பு

அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி, தனியரசு மற்றும் தினகரன் ஆதரவு எம்எல்ஏ கருணாஸ் ஆகியோர் இன்று முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ் மொழியின் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு செல்லும் வகையில், புகழ்பெற்ற ஹார்வெர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்த, அரசின் சார்பில் ரூ.10 கோடி நிதி வழங்கப்பட்டதற்கு எம்எல்ஏக்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

loading...

மேலும், திண்டுக்கல்லில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக சிறையில் ஆயுள்தண்டணை பெற்று 10 ஆண்டுகள் வரை சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளை சட்டத்துக்குட்பட்டு மனிதாபிமான அடிப்படையில் முன் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்ததற்காகவும், முத்தலாக் தடைமசோதாவில் தமிழக அரசின் நிலைப்பாட்டுக்காகவும் நன்றி தெரிவித்தனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

loading...

LEAVE A REPLY