தமிழக அரசு நிறுவனம் ஏற்பாடு – ஜன. 27, 28-ல் முதனிலைத் தேர்வு: எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2, ஐடிஐ படித்தவர்களுக்கு ஓமனில் வேலை.

0
14

எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கு ஓமன் நாட்டில் வேலைவாய்ப்புக்கு தமிழக அரசு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், நர்சுகள், பொறியாளர்கள், டிப்ளமா, ஐடிஐ டெக்னீசியன்கள் மற்றும் தொழிலாளர்களை பல்வேறு நாடுகளில் பணி அமர்த்தி வருகிறது.

தற்போது, ஓமன் நாட்டிலுள்ள முன்னணி பவுண்டரி ஆலைக்கு தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கு ஐடிஐ, எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 2 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும். வயது 22 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

டிப்ளமா மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மிகைநேரப் பணி ஊதியத்துடன் சேர்த்து மாத ஊதியமாக ரூ. 24,740 கிடைக்கும். ஊதிய உயர்வு, இலவச உணவு, இருப்பிடம், மருத்துவக் காப்பீடு, விமான டிக்கெட் ஆகியவையும் வழங்கப்படும்.

முதனிலைத் தேர்வு

தகுதியுடையோர் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி அனுபவம், மாற்றுச்சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் வெள்ளை நிறப் பின்னணியுடன் கூடிய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் ஜனவரி 27 அல்லது 28-ம் தேதி திருச்சி கன்டோன்மென்ட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முதனிலைத்தேர்வுக்கு நேரில் வர வேண்டும். கூடுதல் விவரங்களை www.omcmanpower.com என்ற இணையதளத்தின் மூலமாகவும், 044-22505886, 22502267, 22500417 ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும் 8220634389 என்ற செல்போன் எண் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here