தினகரன் அணிக்கு தாவும் மேலும் ஒரு எம்.எல்.ஏ.? அதிர்ச்சியில் எடப்பாடி

தினகரன் அணிக்கு தாவும் மேலும் ஒரு எம்.எல்.ஏ.? அதிர்ச்சியில் எடப்பாடி

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கீதா டிடிவி தினகரன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றிப்பெற்றதை அடுத்து அதிமுகவில் இருக்கும் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் கட்சி பொறுப்பிலிருந்து தொடர்ந்து பலர் நீக்கப்பட்டு வருகின்றனர். சிலர் அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னதை கைப்பற்றுவதே தனக்கு இலக்கு டிடிவி தினகரன் ஏற்கனவே கூறியிருந்தார். எடப்பாடி அணியில் இருந்து சிலர் டிடிவி தினகரன் அணிக்கு தாவுவதாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தற்போது எல்.ஏ. கீதா டிடிவி தினகரன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
loading...

LEAVE A REPLY