புதிய கட்சிகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம்: அதிமுகவினருக்கு ஓபிஎஸ் அறிவுரை

0
23

புதிய கட்சிகள் பற்றி அதிமுகவினர் கவலைப்பட வேண்டியதில்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

எம்ஜிஆரின் 101-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நேற்று அம்பத்தூரில் நடைபெற்றது. இதில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசியதாவது: ஆர்.கே.நகரில் கண் அயர்ந்த நேரத்தில் 20 ரூபாய் நோட்டை காண்பித்து ஏமாற்றிவிட்டனர். இனிமேல் கண் அயர மாட்டோம். விழித்திருந்து கட்சியையும் ஆட்சியையும் காப்போம். புதிய கட்சிகள், எதிரிகள், துரோகிகள் இவர்களைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். புதிய கட்சிகள் சோளக்காட்டு பொம்மைகள்.

இலங்கையில் 2 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது ஜெயலலிதா ஆட்சியில் இருந்திருந்தால் அது நடந்திருக்குமா. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்கின்றனர். அதற்கு காரணம் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதுதான். இதற்கும், காவிரி பிரச்சினைக்கும் திமுகவினர்தான் காரணம். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின், எம்எல்ஏ வி.அலெக்சாண்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here