முடக்கப்படும் முகநூல் பதிவுகள் – ரஜினியின் அரசியல் இயலாமையை உறுதிபடுத்தும் செயல்பாடுகள்.

0
267

ரஜினியின் அரசியல் வருகை தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தினாலும், அவரின் அரசியல் வருக்கைக்கு ஆதரவை விட எதிர்ப்புகளும், விமர்சனங்களுமே அதிகமாக இருந்தது. அவர் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகள் “தலை சுத்திரிச்சு” என்று பேசியதும், தமிழகத்தின் எந்த  அரசியல் பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்காதது அவரின் திறமையின்மை மற்றும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனம் பக்குவம் இல்லாமையை வெளிபடுத்தியது.மேலும் இவரின் ராமகிருஷ்ணா மடத்தில் சென்ற சந்திப்பும் அங்கு ரஜினி ஆன்மிக அரசியல் எடுக்கபோகிறார் So called secularism இல்ல (மதசார்பின்மை இல்லை) என்று பேசிய காணொளி அவரின் அரசியல் பிம்பத்தை பெரிதும் பாதித்தது. இதை விமர்சித்து சமூக வலைத்தளம் மற்றும் மீம்ஸ் பரவலாக பகிரப்பட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காத ரஜினி ரசிகர் மன்றம் மற்றும் பிஜேபி கட்சியினர், பிஜேபி ஆதரவு பக்கங்களை உபயோகித்து எதிர் மீம்ஸ் போட்டார்கள், ஆனால் அவை பெரிதாக பகிரப்படவில்லை . அதனால் அவரின் DEC 31 ஆம் தேதி பேசிய பேச்சை விமர்சித்த காணோளிகளையும் , அவரின் ராமகிருஷ்ண மாடத்தில் நடந்த உரையாடல் காணோளிகளும் பகிர்ந்த முகநூல் பதிவுகள் copyright என்று   முடக்கப்பட்டு வருகிறது. முடக்கப்பட்ட காணோளியின் கடைசி பாகம் இங்கே..

விமர்சனங்களை கூட எதிர்கொள்ள தெரியாத ரஜினியும் அவரின் பாஜக ஆதரவு கூட்டமும் இதை விட மிக பெரிய எதிர்ப்பலைகளை சந்திக்க போகிறார்கள் என்பதை விரைவில் உணருவார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here