சட்டம்,ஒழுங்கு?

0
33
சட்டம்,ஒழுங்கு?
சட்டம்,ஒழுங்கு?

2018-02-07
சென்னை: சென்னை பள்ளிக்கரணை பகுதியில் நேற்று இரவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே தாம்பரத்தில் இருந்து அதிவேகத்தில் வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் அந்த நபர்கள் பூவிருந்தவல்லி அருகே மலையம்பாக்கம் என்ற இடத்தில் பண்ணை வீட்டில் நடக்கும் தங்களின் நண்பர் பினுவின் பிறந்த நாள் விழாவுக்குச் செல்வதாகக் கூறியுள்ளனர். சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பினு என்பவர் ஏற்கனவே தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து காவல் ஆய்வாளர் சிவக்குமார் இதுகுறித்து அம்பத்தூர் துணை ஆணையாளர் சர்வேஸ்ராஜூக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மாங்காடு, குன்றத்தூர், பூந்தவல்லி, நசரத்பேட்டை, போரூர் மற்றும் எஸ்ஆர்எம்சி காவல் நிலையங்களில் உள்ள காவலர்களை உஷார்படுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து 60க்கும் மேற்பட்ட போலீசார் வாடகை வாகனங்களில் மலையம்பாக்கம் பகுதியைச் சுற்றி வளைத்தனர். ஒரே இடத்தில் 120க்கும் மேற்பட்ட ரவுடிகள் கூடியிருந்ததைக் கண்ட காவலர்கள், பண்ணை வீட்டில் அதிரடியாக நுழைந்தனர். இதனை கண்ட 50க்கும் மேற்பட்ட ரவுடிகள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

72 ரவுடிகளை போலீசார் துப்பாக்கி முனையில் பிடித்தனர். பிடிபட்ட ரவுடிகளிடம் இருந்து வீச்சரிவாள், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் அங்கிருந்த 8 கார்கள், 38 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய ரவுடிகளை தேடும் பணியில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சிக்கிய ரவுடிகளிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் ஒரே நேரத்தில் சிக்கியிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. killer-820017_1920

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here